
நேபாள இடைக்கால பிரதமருக்கு ஜனாதிபதி அநுர வாழ்த்து!
நேபாள இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக நியமிக்கப்பட்ட சுஷிலா கார்க்கிக்கு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.
குறித்த வாழ்த்து செய்தியில்,
“நேபாள இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்ட திருமதி சுஷிலா கார்க்கிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரது தலைமை நேபாளத்தை நீடித்த அமைதி மற்றும் ஜனநாயகம் சீரான நிலைக்குத் திரும்புவதற்கு வழிவகுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என அவர் தமது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

