புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் புதுப்பித்தல் நடவடிக்கை இன்று ஆரம்பம்

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் புதுப்பித்தல் நடவடிக்கை இன்று ஆரம்பம்

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் புதுப்பித்தல் நடவடிக்கை இன்று (15) ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பமாகவுள்ளது.

1964 ஆம் ஆண்டு கட்டப்பட்ட புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம் 60 ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையாக புதுப்பிக்கப்படவுள்ளமை விசேட அம்சமாகும்.

இதற்காக எதிர்பார்க்கப்படும் செலவு 424 மில்லியன் ரூபாய் ஆகும்.

புதுப்பித்தலின் கீழ், புதிய ஓய்வு அறைகள், தகவல் தொடர்பு நிலையங்கள், பாதுகாப்பு அமைப்புகள் உள்ளிட்ட பல அம்சங்கள் பேருந்து நிலையத்தில் நிறுவப்படவுள்ளன.

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் புதுப்பித்தல் நடவடிக்கைகள் இலங்கை விமானப்படையால் மேற்கொள்ளப்படவுள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )