27 வது சிறைக்கைதிகள் தின நிகழ்வு

27 வது சிறைக்கைதிகள் தின நிகழ்வு

சிறைச்சாலைக்கு அனுப்பப்படும் நபர்களைக் குறைப்பது நோக்கமாகக் காணப்பட வேண்டும் என அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார்.

கொழும்பு 8 சர்வோதய அபிவிருத்தி நிதி நிறுவனம் நகரோடிய மண்டபத்தில் அண்மையில் நடாத்திய (12) 27 வது சிறை கைதிகள் தின நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார இதனை தெரிவித்தார்.

சிறைச்சாலைகளில் தங்கியிருக்கும் கைதிகளுக்காக வசதிகளை வழங்கி சிறைக்கைதிகள் நலச் சங்கம் வழங்கும் சேவை பாராட்டத்தக்கது.

இச் அசங்கம் பல வருடங்களாக வருடாந்தம் சிறை கைதிகள் தினத்தை கொண்டாடுகிறது.

தற்போது சிறைச்சாலைகளில் பாரிய நெருக்கடி காணப்படுகிறது. அந்த நெருக்கடிகளை குறைத்து அவசியமான வசதிகளை வழங்குதல் எமது பொறுப்பு என குறிப்பிட வேண்டும்.

சிறைச்சாலைகளுக்கு நபர்களை அனுப்பும் எண்ணிக்கை குறைவடைய வேண்டும் என்பதே எமது இலக்காக இருக்க வேண்டும். வறுமையினால் சிறைச்சாலைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

நாட்டின் சமூகத்தில் சாதாரண நிலையில் பொருளாதார ஸ்திரத்தன்மையை உருவாக்குவதனால் சிறைப்படுத்தப்படுபவர்களின் எண்ணிக்கையை குறைப்பதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம்.

சிறைப்படுத்தப்படும் சகலரினதும் மனித உரிமைகளை பாதுகாக்கும் விதமாக அவசியமான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதே மிகவும் முக்கியமானதாகும். சட்டத்தின் முன்னால் எல்லோரும் சமம். அரசாங்கம் ஒன்றாக சட்டத்தின் ஒழுங்குகளை பாதுகாத்து சமத்துவமான நாடொன்றை உருவாக்குவதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

சிறைக் கைதிகளின் நலனை நோக்காகக் கொண்டு முன்னால் நீதவான் ஆனந்த கிரேரு தலைமையில் சிறைக்கைதிகளுக்கான நலன்புரிச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சிறைக் கைதிகளின் நலன்புரி தினத்தை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள 28 சிறைச்சாலைகளையும் உள்ளடக்கியவாறு சிறைக் கைதிகளுக்காக சமய நிகழ்வுகள், விளையாட்டு, சுகாதாரம், கலாச்சாரம் மற்றும் சட்ட ஆலோசனை நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )