
சீன தூதுவருக்கும் மைத்திரிக்கும் இடையில் சந்திப்பு
இலங்கைக்கான சீனத் தூதர் கி ஜென்ஹோங், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, கொழும்பு, ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தையில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சிறிசேனவைச் சந்திப்பதற்கு முன்பு, கொழும்பில் உள்ள சீனத் தூதர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரையும் சந்தித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
CATEGORIES Sri Lanka

