பயிர் சேதத்திற்கான பல சலுகை காப்பீட்டுத் திட்டங்கள்

பயிர் சேதத்திற்கான பல சலுகை காப்பீட்டுத் திட்டங்கள்

இலங்கையில் வணிக ரீதியாகவும் ஏற்றுமதிக்காகவும் பயிரிடப்படும் மஞ்சள் மற்றும் இஞ்சி பயிர்களுக்கு தற்போது விசேட காப்பீட்டுத் திட்டங்கள் நடைமுறையில் இருப்பதாக கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதுச் சபை குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, விவசாயிகள் தங்கள் “இஞ்சி” பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 200,000/= வரை காப்பீட்டுத் தொகையைப் பெறலாம், மேலும் 7% காப்பீட்டுத் தவனையை செலுத்துவதன் மூலம், இயற்கை பேரழிவுகள், நோய்கள், பூச்சி சேதம் மற்றும் காட்டு யானை சேதம் ஆகியவற்றிற்கான காப்பீட்டுத் தொகையைப் பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும், விவசாயிகள் தங்கள் “மஞ்சள்” பயிர்களைப் பாதுகாக்க ஏக்கருக்கு ரூ. 700,000/= வரை காப்பீட்டுத் தொகையைப் பெறலாம், மேலும் 7% காப்பீட்டுத் தவனையை செலுத்துவதன் மூலம், இயற்கை பேரழிவுகள், நோய்கள், பூச்சி சேதம் மற்றும் காட்டு யானை சேதம் ஆகியவற்றால் ஏற்படும் அபாயங்களுக்கு காப்பீட்டுத் தொகையைப் பெற்றுக்கொள்ள முடியும்.

குறிப்பாக பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை, குருநாகல், அனுராதபுரம் மற்றும் பதுளை போன்ற யானைகளால் பாதிப்புக்கள் ஏற்படக்கூடிய மாவட்டங்களில், காட்டு யானைகளால் பயிர்களுக்கு சேதம் ஏற்பட்டால், விவசாயிகளுக்கு இழப்பீடு பெற அதிகாரம் அளிக்கும் வகையில் இந்த சலுகைக் காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )