அனைத்து தடை உத்தரவுகளையும்  நீக்கிய ஐக்கிய தேசியக் கட்சி

அனைத்து தடை உத்தரவுகளையும் நீக்கிய ஐக்கிய தேசியக் கட்சி

ஐக்கிய மக்கள் சக்தியில் (ஐ.ம.ச.) இணைந்த காரணத்தால் கட்சி உறுப்புரிமை நீக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கு விதிக்கப்பட்ட தடைகள் அனைத்தையும் நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம், நேற்று (16) சிறிகொத்தாவில் நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில், கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

மேலும், இந்த தீர்மானத்தின் சட்டரீதியான விளைவுகளை ஆராய, முன்னாள் சட்டமா அதிபர் திலக் மாரப்பன தலைமையிலான குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் மூலம், ஐ.ம.ச.வில் இருக்கும் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களுக்கு மீண்டும் கட்சியில் இணைந்து பணியாற்ற வாய்ப்பு கிடைத்துள்ளதாக கட்சித் தலைவர் குழு உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

கூட்டத்தின் போது, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்ட வேளையில் ஆதரவு தெரிவித்த அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் நன்றி தெரிவிக்கும் தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )