பேருந்திலிருந்து தவறி விழுந்த இளைஞன் பலி

பேருந்திலிருந்து தவறி விழுந்த இளைஞன் பலி

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உருத்திரபுரம் வீதியின் 8 கால்வாய் பகுதியில், அரவியார் நகரிலிருந்து உருத்திரபுரம் நோக்கிச் சென்ற பேருந்திலிருந்து நேற்று (18) இரவு இளைஞன் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் விபத்தில் காயமடைந்த நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவத்தில் உருத்திரபுரத்தைச் சேர்ந்த 26 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )