
சட்டவிரோதமாக புதையல் தோண்டிய 2 பேர் கைது
குருணாகல், பன்சியகம – யாய 07 பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டலில் ஈடுபட்டிருந்த இரண்டு சந்தேகநபர்கள் வெள்ளிக்கிழமை (23) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பன்சியகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விசாரணைகளின் போது, கைது செய்யப்பட்டவர்கள் 33 மற்றும் 41 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் முறையே மாத்தளை மற்றும் பண்டாரவளை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பன்சியகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

