ஐசிசி ஆடவர் T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் : நெதர்லாந்தைவீழ்த்தியது பாகிஸ்தான்

ஐசிசி ஆடவர் T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் : நெதர்லாந்தைவீழ்த்தியது பாகிஸ்தான்

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பத்தாவது ஐசிசி ஆடவர் T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் பாகிஸ்தான் அணி நெதர்லாந்து அணியை வீழ்த்தியது

இன்றைய தினம் கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் ஆரம்பமான பத்தாவது ஐசிசி ஆடவர் T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் நெதர்லாந்து அணி பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தது.

அதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி 19.5 ஓவர்கள் நிறைவில் சகலவிக்கெட்டுகளையும் இழந்து 147 ஓட்டங்களை பெற்றது

துடுப்பாட்டத்தில் நெதர்லாந்து அணி சார்பில் அதிகபட்சமாக அணித்தலைவர் ஸ்காட் எட்வர்ட்ஸ் (Scott Edwards) 37 ஓட்டங்களையும் பாஸ் டி லீடே (Bas de Leede) 30 ஓட்டங்களையும் மைக்கேல் லெவிட் (Michael Levitt) 24 ஓட்டங்களையும் பதிவு செய்தனர்.

பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் சல்மான் மிர்சா (Salman Mirza) மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

தொடர்ந்து 148 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 19.3 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுகளை இழந்து 148 ஓட்டங்களை பெற்றது

துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் அணி சார்பில் அணி தலைவர் சல்மான் அலி ஆகா (Salman Ali Agha) 12 ஓட்டங்களையும் சைம் அயூப் (Saim Ayub) 24 ஓட்டங்களையும் சாஹிப்சாதா ஃபர்ஹான் (Sahibzada Farhan) 47 ஓட்டங்களையும் பதிவுசெய்தனர்.

பந்துவீச்சில் நெதர்லாந்து அணி சார்பில்
ஆர்யன் தத் (Aryan Dutt) இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )