
நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 524 பேர் கைது
பொலிஸ் மாஅதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, நாடளாவிய ரீதியில் வெள்ளிக்கிழமை (23) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது 524 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த விசேட நடவடிக்கையின் கீழ் 30,236 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன், குற்றங்களுடன் தொடர்புடையதாகவும் நேரடியாக அடையாளம் காணப்பட்டவர்களாகவும் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிற போக்குவரத்து குற்றங்கள் தொடர்பில் 4,706 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

