
பொலிஸாருக்கு எதிராக 9000 முறைப்பாடுகள் பதிவு
இதுவரை பொலிஸார் தொடர்பிலான 9000 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது .
பொலிஸார் தொடர்பிலான முறைப்பாடுகளை பதிவு செய்யும் நோக்குடன் அறிமுகப்படுத்தப்பட்ட Whatsapp இலக்கத்திற்கு இந்த முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
முறைப்பாடுகள் தொடர்பில் உடனடி தீர்வுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
071-8598888 Whatsapp இலக்கத்தினூடாக பொலிஸார் தொடர்பிலான முறைப்பாடுகளை உடனடியாக தெரிவிக்க முடியும் என பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரிய அண்மையில் தெரிவித்தார்.
CATEGORIES Sri Lanka

