
மத்திய கிழக்கில் பதற்றம் ; அவசர காலங்களில் தொடர்பு கொள்ள புதிய இலக்கம் வெளியீடு
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக அங்கு வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகம் அவசரகால பதிலளிப்பு பிரிவை நிறுவியுள்ளது.
அவசர காலங்களில் தொடர்பு கொள்ள பின்வரும் தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை அமைச்சகம் வெளியிட்டுள்ளது:
தொலைபேசி எண்:
+94 117 445641 / +94 112 207250
மின்னஞ்சல்
emergency.sl@mfa.gov.lk

