
இலங்கை போக்குவரத்து சபைக்கு பெண் ஊழியர்களை நியமனம் விமானப் பணிப்பெண் தரத்திற்கு சீருடை வடிவமைப்பு
இலங்கை போக்குவரத்து சபைக்கு பெண் ஊழியர்கள் உட்பட 450 ஓட்டுநர்கள் மற்றும் 300 பஸ் நடத்துனர்களை நியமிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
நேர்காணல்கள் தற்போது நடைபெற்று வருவதாக தெரிவித்த அவர் , பெண் பணியாளர்களும் அவர்களில் உள்ளடங்குவதாக கூறியுள்ளார்.
பஸ் டிப்போக்களில் பெண்களை பணியமர்த்துவதற்கு முன்பு அவர்களுக்கு போதுமான பாதுகாப்பு மற்றும் சுகாதார வசதிகளை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க, இலங்கை போக்குவரத்து சபைக்குத் தெரிவித்தார்.
இதன் ஆரம்ப திட்டமாக ,கொழும்பு மாவட்டத்தில் உள்ள பஸ்களுக்கு பெண் ஊழியர்கள் நியமிக்கப்படுவர் எனவும் பின்னர் கட்டம் கட்டமாக விரிவுபடுத்தப்படும் எனவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டார்.
விமானப் பணிப்பெண் தரத்திற்கு அவர்களின் சீருடை வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் இளைய தலைமுறையினர் ,இலங்கை போக்குவரத்து சபையை (SLTB) ஒரு கவர்ச்சிகரமான பணியிடமாக பார்க்கும் வகையில் அதன் சேவைகள் தரமுயர்த்தப்படும் எனவும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

