
யக்கலையில் மோட்டார் சைக்கிள், கொள்கலன் லொறி மோதி விபத்து ஒருவர் உயிரிழப்பு
கொழும்பு-கண்டி பிரதான வீதி, யக்கலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று ,அதே திசையில் பயணித்த கொள்கலன் லொறியை முந்திச் செல்ல முற்பட்டபோது, கொள்கலன் லொறியில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் யக்கலை பகுதியைச் சேர்ந்த 25 வயது இளைஞர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பில் யக்கலை போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

