யாழில் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது

யாழில் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக வெளிநாட்டுக்கு செல்ல முற்பட்டவேளை விமான நிலையத்தில் வைத்து இன்று (23) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இருந்து கைக்குண்டு ஒன்றும் இரண்டு வாள்களும் மீட்கப்பட்டன.

விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தேவையான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )