
யாழில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலி
யாழ்ப்பாணம் – உடுவில் பகுதியில் இளைஞன் ஒருவர் மின்சாரம் தாக்கியதில் நேற்று (23) உயிரிழந்துள்ளார்.
மாதா கோவில் வீதி, உடுவில், சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த விஷ்ணுராஜ் யதுர்மன் (வயது 21) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் நேற்று (23) காலை ஆடைகளை மினுக்கிக் (iron) கொண்டிருந்த போது மின் இணைப்பில் இருந்த கோளாறு காரணமாக மின்சாரம் அவர் மீது தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார்.
சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
CATEGORIES Sri Lanka

