
கேபிள் கார் விபத்தில் ஏழு பிக்குகள் உயிரிழப்பு
மெல்சிரிபுர – பன்சியகமவில் உள்ள நா உயன மடாலயத்தில் நேற்று (24) நடந்த கேபிள் கார் விபத்தில் 7 பிக்குகள் உயிரிழந்துள்ளனர்.
புனித தலத்தில் மத சடங்குகளை முடித்துவிட்டு தியான மண்டபத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இறந்த துறவிகளில் குறைந்தது இரண்டு பேர் வெளிநாட்டு பிரஜைகள் எனவும், அவர்களின் உடல்கள் கோகரெல்லா மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏனைய துறவிகளின் உடல்கள் குருநாகல் போதனா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.
விபத்து நடந்த நேரத்தில் 13 பௌத்த துறவிகள் கேபிள் காரில் சவாரி செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பலத்த காயமடைந்த துறவிகள் குருநாகல் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES Sri Lanka

