
வாகன இலக்கத் தகடுகள் அச்சிட புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து
வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை அச்சிடும் பணியை புதிய நிறுவனமொன்றிடம் ஒப்படைப்பதற்கான ஒப்பந்தம் இன்று (10) கையெழுத்திடப்பட்டது.
இந்த நிகழ்வில் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க, வீதிப் போக்குவரத்து மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது கருத்து தெரிவித்த கமல் அமரசிங்க, ஒப்பந்தத்தின் படி குறித்த நிறுவனம் மூன்று மாத இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகளை ஆரம்பிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
மேலும், இந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற்கு நீண்ட காலம் எடுத்ததாகவும், அமைச்சரவையின் அனுமதி மற்றும் சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரிலேயே அது கையெழுத்திடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும், குறித்த நிறுவனத்துடன் ஆரம்பிக்கப்பட்ட முதற்கட்டப் பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் இரண்டு மாத வேலைகளை ஆரம்பிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
இந்தத் திட்டத்தின் பெறுமதி சுமார் 3 பில்லியன் ரூபாவாகும். மேலும், இன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கான இந்தப் பணிகள் அந்த நிறுவனத்திற்கு வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

