
ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கினால் ஈரான் மீது 20 மடங்கு தாக்குதல் நடத்தப்படும் – ட்ரம்ப் எச்சரிக்கை
ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் விநியோகத்தை தடுக்கும் பணியில் ஈடுபட்டால் ஈரான் மீது இன்னும் கடுமையாக தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளின் தாக்குதல் தீவிரமடைந்துள்ளதனால், வளைகுடா நாடுகளில் பெரும் பதற்றம் நிலவுகின்றது.
இதனால் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதுடன் சர்வதேச நாடுகளில் எரிபொருள் மற்றும் எரிவாயு விலை ஏற்றம் கண்டுள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுத்துள்ளது.
அந்த எச்சரிக்கையில், ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் விநியோகத்தை தடுக்கும் எதையும் ஈரான் செய்தால், அவர்கள் இதுவரை தாக்கப்பட்டதை விட இருபது மடங்கு கடுமையாக அமெரிக்காவால் தாக்கப்படுவார்கள்.
அத்துடன், எளிதில் அழிக்கக்கூடிய இலக்குகளை நாங்கள் அகற்றுவோம், இதனால் ஈரான் மீண்டும் ஒரு தேசமாக மீண்டும் கட்டியெழுப்பப்படுவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது.
மீண்டும் மரணம், நெருப்பு மற்றும் சீற்றம் அவர்கள் மீது ஆட்சி செய்யும், ஆனால் அது நடக்கக்கூடாது என்று நான் நம்புகிறேன், பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

