
யாழில் ஆலயச் சிலை சேதம் ; ஒருவர் கைது
யாழ்ப்பாணம் சரவணை பகுதியில் உள்ள ஆலயத்தில் உருவச்சிலையை உடைத்து சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சரவணை செல்லக்கதிர்காமம் ஆலயத்தில் உள்ள உருவச்சிலை நேற்று சேதப்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கண்காணிப்பு கமரா காட்சிகளின் அடிப்படையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஊர்காவற்துறை பொலிஸார், அப்பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார், சந்தேக நபரை ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பிரதீபன்
CATEGORIES Sri Lanka

