ஒக்டோபர் முதல் கட்டாயமாக தனியார் பஸ்களில் பயணச்சீட்டு வழங்க வேண்டும்இந்த ஆண்டு இறுதிக்குள் பஸ்களில் அட்டை மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்படும்

ஒக்டோபர் முதல் கட்டாயமாக தனியார் பஸ்களில் பயணச்சீட்டு வழங்க வேண்டும்இந்த ஆண்டு இறுதிக்குள் பஸ்களில் அட்டை மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்படும்

அடுத்த மாதம் முதலாம் திகதியிலிருந்து தனியார் பஸ்களில் பயணச்சீட்டு வழங்குவதும் பெறுவதும் கட்டாயமாக்கப்படும் என மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் காமினி ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.

பயணச்சீட்டு வழங்காத நடத்துநர்கள் மற்றும் பயணச்சீட்டுகளைப் பெறாத பயணிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அவர் வலியுறுத்தினார்.

பயணிகள் பஸ்களில் ஜிபிஎஸ் சாதனங்கள் பொருத்தப்படுமென்றும் இந்த ஆண்டு இறுதிக்குள் அட்டை மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்படுமென்றும் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் காமினி ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )