விலங்குகள் கணக்கெடுப்பின் போது பொதுமக்கள் வழங்கிய தகவல்கள் 50% துல்லியமானவை

விலங்குகள் கணக்கெடுப்பின் போது பொதுமக்கள் வழங்கிய தகவல்கள் 50% துல்லியமானவை

விலங்கு கணக்கெடுப்பு அறிக்கையில் பொதுமக்கள் வழங்கிய தகவல்கள் 50% துல்லியமானவை என்று விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.

இன்று (26) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது பிரதி அமைச்சர் இதனை தெரிவித்தார்.

கடந்த மார்ச் மாதம் உணவுப் பயிர்களை சேதப்படுத்தும் விலங்குகளை அடையாளம் காணவும், முறையான ஆய்வு நடத்தவும், பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் விலங்கு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இந்த கணக்கெடுப்பில் குரங்குகள், மந்திகள், மயில்கள், மர அணில்கள் மற்றும் தீக்கோழிகள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டன.

முடிவுகளின்படி, குரங்குகள் மற்றும் மந்திகள் தொடர்பாக பொதுமக்கள் வழங்கிய தகவல்கள் 50% துல்லியமானவை என பிரதி அமைச்சர் கூறினார்.

அதனடிப்படையில் தற்போது நாட்டில் 5.1 மில்லியன் குரங்குகளும் 1.7 மில்லியன் மந்திகளும் 2.6 மில்லியன் மர அணில்களும் 4.2 மில்லியன் மயில்களும் இருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மேலும் இந்த விலங்குகள் கணக்கெடுப்புக்கு 3.8 மில்லியன் ரூபாய் மாத்திரமே செலவிடப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )