
6 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளைத் திருடிய இரண்டு இளைஞர்கள் கைது
கணேமுல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நபர் ஒருவரைத் தாக்கிவிட்டு 6 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளைக் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பான விசாரணையில், கிரிபத்கொடவில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவின் அதிகாரிகள் குழு நடத்திய விசேட விசாரணையைத் தொடர்ந்து ,17 மற்றும் 20 வயதுடைய கெந்தலியத்தபாலுவ மற்றும் கணேமுல்ல பகுதிகளைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், திருடப்பட்ட தங்கப் பொருட்களிலிருந்து உருக்கி தயாரிக்கப்பட்ட 121.350 கிராம் மற்றும் 17.15 கிராம் எடையுள்ள இரண்டு தங்க கட்டிகள் மீட்கப்பட்டன.
மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு, சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
CATEGORIES Sri Lanka

