
கிராண்ட்பாஸ், தெஹிவளை பகுதிகளில் இரண்டு சந்தேகத்திற்கிடமான சடலங்கள் கண்டெடுப்பு
கொழும்பு கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவில் சடலம் ஒன்றும் , தெஹிவளை பொலிஸ் பிரிவில் மற்றொரு சடலமும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை கிராண்ட்பாஸ், இங்குருகடே சந்திக்கு அருகிலுள்ள ஜாடி வாவியில் சந்தேகத்திற்கிடமான சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
உயிரிழந்தவர் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் , சடலம் 35 முதல் 40 வயதுக்குட்பட்ட ஆணுடையது என்றும் போலீசார் தெரிவித்தனர்.
இந்த நபர் சுமார் 5 அடி 4 அங்குலம் உயரம் கொண்டவர் என்றும், கருப்பு ஷார்ட்ஸ் மற்றும் கருப்பு டி-சர்ட் அணிந்திருந்தார் என்றும் கூறப்படுகிறது.
சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில்வைக்கப்பட்டுள்ளது,
மற்றொரு சடலம் நேற்று இரவு தெஹிவளை, சிறிவர்தன வீதிப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டது.
உயிரிழந்தவர் தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஆண் என தெரியவந்துள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக களுபோவில வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பில் கிராண்ட்பாஸ்மற்றும் தெஹிவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

