பண்டிகையை முன்னிட்டு இயக்கப்படும் விரைவு ரயில் குறித்த அறிவிப்பு

பண்டிகையை முன்னிட்டு இயக்கப்படும் விரைவு ரயில் குறித்த அறிவிப்பு

நத்தார் பண்டிகை, பாடசாலை விடுமுறை மற்றும் வருட இறுதி நீண்ட விடுமுறையை முன்னிட்டு விசேட ரயில் சேவைகளை முன்னெடுக்க ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

விசேட ரயில் 29ஆம் திகதியன்று மு.ப. 05.00 மணிக்கு மாத்தறை புகையிரத நிலையத்திலிருந்து புறப்பட்டு மு.ப. 08.30ற்கு கொழும்பு கோட்டையை வந்தடைய திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை இடையிலான நகரங்களுக்கு இடையிலான ரயில் (Intercity) நாளை மற்றும் 28 ஆகிய தினங்களில் பயணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ரயில் 09 குளிரூட்டப்பட்ட முதல் வகுப்பு பெட்டிகளைக் கொண்டது .
இன்று (24) பி.ப. 03.00 மணிக்கு மருதானையிலிருந்து மாத்தறை வரை விசேட விரைவு ரயில் பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது..

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )