
சிரமதானத்தின் போது நோய்வாய்ப்பட்ட 40 குழந்தைகள் வைத்தியசாலையில் அனுமதி
மெதிரிகிரிய மண்டலகிரிய தேசிய பாடசாலை ஒன்றில் சிரமதானத்தின் போது ,40க்கும் மேற்பட்ட மாணவர்கள் நோய் நிலைமைக்கு ஆளாகிய நிலையில் மெதிரிகிரிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றது.
காலையில் பாடசாலை வகுப்பறைகளைச் சுற்றி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட பிறகு, குறித்த பாடசாலை மாணவர்களில் சிலருக்கு அரிப்பு அறிகுறிகள் ஏற்பட்டன, பின்னர் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
சிகிச்சை பெற்ற பிறகு அவர்களில் ஐந்து மாணவர்களைத் தவிர ஏனையவர்கள் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.
சம்பவம் குறித்து விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.
CATEGORIES Sri Lanka

