
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிகள் – சாரதிகளுக்கான இரண்டாவது ஓய்வெடுக்கும் பகுதி
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இரண்டாவது ஓய்வெடுக்கும் பகுதிக்கான கட்டுமானப் பணிகள் மாத்தறை உடுக்காவ பகுதியில் தொடங்கப்பட்டுள்ளன,
இது கொட்டாவ மற்றும் மத்தள இடையே பயணிக்கும் ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளுக்கு ஓய்வு மற்றும் வசதிகளை வழங்கும் நோக்கில் நிர்மாணிக்கப்படுகிறது.
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில சி.கே. பெரேராவின் தலைமையில் இந்த திட்டம் கடந்த திங்கட் கிழமை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டது.
மாத்தறை கொடகம மற்றும் கொக்மாடுவ இடையே 119வது கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த ஓய்வுப் பகுதி, ரூ. 43 மில்லியன் ஆரம்ப ஒதுக்கீட்டில் கட்டப்பட்டு வருகிறது.
முதல் கட்டமாக , ஒரே நேரத்தில் சுமார் 30 வாகனங்களுக்கு போதுமான வகையிலும் இரண்டாம் கட்டமாக, மேம்பட்ட திறன் மற்றும் வசதிகளுடன் முழுமையாக விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் தற்போதுள்ள ஓய்வுப் பகுதி ஒன்று வெலிபென்னவில் உள்ளது.
இதன் கட்டுமானப் பணிகள் சுமார் மூன்று மாதங்களுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் ஆலோசனையின் பேரில், , 314 கிலோமீட்டர் நீளமுள்ள விரைவுச் சாலை வலையமைப்பில் சர்வதேச தரத்தை பூர்த்தி செய்யும் ஓய்வுப் பகுதிகளை நிறுவுவதற்கான பரந்த திட்டத்தின் ஒரு பகுதியாக ,இந்த திட்டம் அமைந்ததுள்ளது.
இது பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதிக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் நிர்மாணக்கப்படுகிறது.

