
ஷவர்மா சாப்பிட்ட 30 பேருக்கு உடல் நிலை பாதிப்பு
திருவனந்தபுரம் கிளிப்பாலம், கரமன், அட்டுக்கல், மணக்காடு, கமலேஸ்வரம், ஸ்ரீவராகம் மற்றும் பேட்டா பகுதிகளை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோருக்கு திடீர் வாந்தி-பேதி ஏற்பட்டது.
அவர்கள் உடனடியாக தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
இவர்கள் அட்டக்குளங்கரா பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் இருந்து ஷவர்மா வாங்கி சாப்பிட்டதால் தான் உடல் நலபாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் குறிப்பிட்ட உணவகம் சென்று சோதனை நடத்தினர். அங்கிருந்த உணவுகளின் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
CATEGORIES India

