தேயிலைத் தொழிலில் தோட்டத் தொழிலாளர்களின் பங்களிப்பை அதிகரிக்க வேலைத்திட்டம்

தேயிலைத் தொழிலில் தோட்டத் தொழிலாளர்களின் பங்களிப்பை அதிகரிக்க வேலைத்திட்டம்

தேயிலைத் தொழிலில் தொடர்பாக தோட்டத் தொழிலாளர்களின் பங்களிப்பை அதிகரிப்பது குறித்து, அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தொழிற்சங்கத் தலைவர்களுடனான விசேட கூட்டம் நேற்று முன்தினம் (26) நுவரெலியா நகர மண்டபத்தில் பெருந்தோட்ட சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் திர சமந்த வித்யாரத்னவின் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், மாவட்ட மற்றும் தோட்ட மட்டத் தலைவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும், வளங்களை மேம்படுத்துதல், சமூகப் பாதுகாப்பு மற்றும் தேயிலைத் தொழிலை மேம்படுத்துவதற்கான புதிய திட்டத்திற்கு தோட்டத் தொழிலாளர் சமூகத்தின் பங்களிப்பு குறித்தும் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )