
மதுபானசாலைகளுக்கு நாளை பூட்டு
ஒக்டோபர் 3ஆம் திகதி உலக மதுவிலக்கு தினமாகும்.
இதனையொட்டி நாட்டில் உள்ள சகல மதுபானசாலைகளும் நாளை (03) மூடப்படும் என்றும், சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்வோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, சட்டவிரோத மதுபானங்களை விற்பனை செய்வோரை கைது செய்ய விசேட சுற்றிவளைப்பு தேடுதல்கள் மேற்கொள்ளப்படும் என்றும் கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.

