பொலன்னறுவை ஜயந்திபுர உப தபால் நிலையத்தின் கட்டுமானப் பணிகள் ஆரம்பம்

பொலன்னறுவை ஜயந்திபுர உப தபால் நிலையத்தின் கட்டுமானப் பணிகள் ஆரம்பம்

பொலன்னறுவை ஜயந்திபுர உப தபால் நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (01) சுகாதார மற்றும் வெகுசன பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி தலைமையில் இடம்பெற்றது.

சுமார் மூன்று கோடி ரூபாய் செலவில் நிருமாணிக்க எதிர்பார்த்திருக்கும் இந்த உப தபாலகத்தை நவீன வசதிகளுடன் கூடிய மக்களுக்கு உகந்த அலுவலக வளாகமாக கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

இலங்கை தபால் சேவையை இலாபம் ஈட்டும் நிறுவனமாக நவீனமயமாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அது தபால் துறையில் பணியாற்றும் அனைத்து அதிகாரிகளின் பொறுப்பாகும் என்றும், அதனைப் பாதுகாப்பதும் அவர்களின் பொறுப்பாகும் என்றும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிகழ்விற்கு, வீடமைப்பு பிரதி அமைச்சர் டி.பி. சரத், பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சுனில் ரத்னசிறி மற்றும் பத்மசிறி பண்டார, தபால் மா அதிபர் ருவன் சத்குமார, தபால் திணைக்களத்தின் ஊழியர்கள் மற்றும் பிரதேசவாசிகள் பலரும் கலந்து கொண்டனர்.

பொலன்னறுவை மாவட்ட ஊடகப் பிரிவு

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )