நல்லூர் கந்தசுவாமி கோயிலின் மானம்பூ உற்சவம்

நல்லூர் கந்தசுவாமி கோயிலின் மானம்பூ உற்சவம்

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயிலில் நவராத்திரி இறுதி நாளான நேற்று (03) காலை மானம்பூ உற்சவம் இடம்பெற்றது.

காலை 6.45 மணிக்கு வசந்த மண்டப பூசை இடம்பெற்று, குதிரை வாகனத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி வெளிவீதி உலாவந்ததுடன் மானம்பூ உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது.

நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருக பெருமானின் அருட்காட்சியை கண்டு களித்தனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )