பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை

பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான இணையவழி விண்ணப்பக் காலம் ஒக்டோபர் 9 ஆம் திகதியுடன் நிறைவடைகிறது. எனவும் அன்று நள்ளிரவு 12.00 மணிக்குப் பிறகு இணையவழி விண்ணப்ப முறை மூடப்படும் என்று இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. 

எதிருவரும் சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் செப்டம்பர் 18 ஆம் திகதி முதல் இணையவழி ஊடாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இது தொடர்பாக ஏதேனும் வினவ வேண்டுமானால், பின்வரும் தொலைபேசி இக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம்: 0112-784208/ 0112-784537/ 0112-785922. 

அத்துடன் 0112-784422 என்ற தொலைநகல் எண் அல்லது gceolexansl@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் வினவ முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )