பாகிஸ்தானில் நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற ஹெலிகொப்டர் விபத்து – இரு விமானிகள் உட்பட ஜவர் பலி!

பாகிஸ்தானில் நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற ஹெலிகொப்டர் விபத்து – இரு விமானிகள் உட்பட ஜவர் பலி!

வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற MI-17 ஹெலிகொப்டர் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில், இரு விமானிகள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாடு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்

வடக்கு பாகிஸ்தானில் நிலவும் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற ஹெலிகொப்டர் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )