5 கோடி ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் வத்தளையில் இருவர் கைது

5 கோடி ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் வத்தளையில் இருவர் கைது

வத்தளையில் 5 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான கேரள கஞ்சாவுடன் 2 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று மாலை வத்தளை, பங்களாவத்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து 309 கிலோகிராம் நிறையுடைய கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைதான இருவரும் க்ராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 43 மற்றும் 49 வயதானவர்கள் எனவும் வாடகை வீடொன்றின் அறையில் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் வெலிசறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகின்றனர்.

மேலதிக விசாரணைகள் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்கின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )