
இந்த நேரத்தில் வேலைநிறுத்தம் செய்வது மிகவும் நியாயமற்றது
அரசு வைத்தியசாலைகளில் நோயாளிகளை பணயக்கைதிகளாக பிடித்து வேலைநிறுத்த நடவடிக்கைக்கு அழைப்பு விடுக்கும் ஒரு மோசமான நடவடிக்கை சில தொழிற்சங்கங்களால் மேற்கொள்ளப்படுவதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (18) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும் அவர் “இதுபோன்ற நேரத்தில் வேலைநிறுத்தம் செய்வது மிகவும் நியாயமற்றது. சுகாதார ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து தொடர்புடைய நிறுவனங்களுக்கும் நாங்கள் தகவல் தெரிவித்துள்ளோம், அதே நேரத்தில் அவர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.