
கிராமப்புற வறுமையை ஒழிப்பதற்காக நாடு தழுவிய புதிய திட்டம்
கிராமப்புற வறுமையை ஒழிப்பதற்காக நாடு தழுவிய புதிய திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும் என கிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பண்ணிலகே தெரிவித்தார்.
கடந்த 14ஆம் திகதி பிளிமத்தலாவ கிராம அபிவிருத்தி அப்பியாசம் மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்ற கிராம அபிவிருத்தித் திட்டங்களை உருவாக்குவது தொடர்பாக அதிகாரிகளுக்கு தெளிவூட்டும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இதன்படி, நாட்டின் 341 பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள 14,022 கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கி இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.