
மூதூரில் நாளை நீர் வெட்டு
நீர் பாசன வடிகாலமைப்பு சபை சில பகுதிகளில் அவசர திருத்த வேலை மேற்கொள்ளவிருப்பதால் நாளை (04) காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை மூதூர் மற்றும் அதைச் சூழ்ந்துள்ள பல பகுதிகளில் குடிநீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், திருத்தப் பணிகள் முடிவடைந்தவுடன் உடனடியாக நீர் விநியோகம் வழமைக்கு திரும்பும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
CATEGORIES Sri Lanka

