
மின்சாரக் கட்டண அதிகரிக்கப்படுமா என 15ஆம் திகதிக்கு முன் அறிவிக்கப்படும்
மின்சாரக் கட்டணத்தை 6.8 சதவீதத்தால் அதிகரிப்பது தொடர்பில்
இம் மாதம் 15ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக தீர்மானிக்கப்படுமென பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபையால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகமைய இந்த முடிவுகள் அறிவிக்கப்படுமென , பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது .
மின்சாரக் கட்டண திருத்தங்கள் தொடர்பான பொது ஆலோசனை செயல்முறை தற்போது நடைபெற்று வருகின்றது.
இம் மாதம் 8 ஆம் திகதி மேல் மாகாண ஆலோசனை கூட்ட இறுதி அமர்வின் பின்னர்,மின்சாரக் கட்டணத்தை 6.8 சதவீதத்தால் அதிகரிப்பது தொடர்பான இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
CATEGORIES Sri Lanka

