
அதி வேகத்தில் பயணித்த லொறி மோதியதில் வீதியில் சென்ற பாடசாலை மாணவன் உயிரிழப்பு கம்பஹா – மினுவாங்கொடை வீதியில் சம்பவம்
கம்பஹா – மினுவாங்கொடை வீதியில் வீதியவத்த சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக கம்பஹா பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
அதிக வேகத்தில் பயணித்த லொறி ஒன்று வீதியில் சென்றுகொண்டிருந்த பாடசாலை மாணவன் மீது மோதிய பின்னர் கார் மற்றும் முச்சக்கரவண்டி மீது மோதியுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த 15 வயதுடைய பாடசாலை மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக கம்பஹா பொலிஸார் தெரிவித்தனர்.
லொறியின் சாரதி அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில் கம்பஹா பொலிஸ் நிலையத்தில் சரணைந்துள்ளார்.
மேலதிக விசாரணைகளை கம்பஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

