44 மதன மோதக போதை மாத்திரை பொதிகளுடன் வெலிமடையில் இரண்டு இளைஞர்கள் கைது

44 மதன மோதக போதை மாத்திரை பொதிகளுடன் வெலிமடையில் இரண்டு இளைஞர்கள் கைது

மதன மோதக போதை மாத்திரைகளுடன் காரில் பயணித்திக்கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் பதுளை, வெலிமடை, நிவெல பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வெலிமடை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த காரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்த இளைஞர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பரவகும்புர மற்றும் தியத்தலாவை ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 21 மற்றும் 23 வயதுடைய இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டனர் ,

இளைஞர்களி டமிருந்து மதன மோதக போதை மாத்திரைகள் அடங்கிய 44 பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

வெலிமடை பிரதேசத்தில் விற்பனை செய்வதற்காக மதன மோதக போதை மாத்திரைகளை காரில் கொண்டு சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட இளைஞர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் மூலம் நாவெல உல்பத்தகும்புர பிரதேசத்தில் உள்ள தோட்டம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சொதனையில் 44 கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் 55 வயதுடைய தோட்ட உரிமையாளரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வெலிமடை பொலிஸார் மேலதிக விசாரணைகளைமேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )