
யாழ்ப்பாணம் வடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர் திருவிழா
யாழ்ப்பாணம் வடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர் திருவிழா இன்று (05) சிறப்பாக இடம்பெற்றது.
கணபதீஸ்வரக் குருக்கள் தலமையிலான சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகள் மேற்கொண்டு காலை 7:30 மணியளவில் வசந்த மண்டப பூசைகள் இடம்பெற்றதனை தொடர்ந்து சரியாக 9:30 மணியளவில் வல்லிபுர ஆழ்வார் தேர் ஏறி வீதி உலா வந்தார்.
முன்னே ஆஞ்சநேயப்பெருமான் செல்ல பின்னே விநாயகப்பெருமானும், இலக்குமி தேவியை தொடர்ந்து ஶ்ரீ வல்லிபுரத்து சக்கரத்து ஆழ்வார் வலம்வந்தார்.
இன்றைய தேரத்திருவிழாவில் அடியவர்கள் அங்க பிரதட்டை, பால் காவடி, செடில்காவடி, தீச்சட்டி உட்பட்ட பல்வேறு நேறறிக்கடன்களை நிறைவேற்றினர்.
யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
பிரதீபன்
CATEGORIES Sri Lanka

