
தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் 32 புறாக்கள் திருட்டு
தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் இருந்து 32 புறாக்கள் திருடப்பட்டுள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தேசிய மிருகக்காட்சிசாலையின் உதவி பணிப்பாளர் எச்.ஏ.டி.பி. சமன்மாலி, தெஹிவளை பொலிஸாருக்கு செய்த முறைப்பாட்டின் பிரகாரம், கடந்த 4 ஆம் திகதி அதிகாலையில் இந்தத் திருட்டு நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
காணாமல் போன புறாக்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.
தெஹிவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

