திருகோணமலை சட்டத்தரணிகள் அடையாள வேலை நிறுத்தம்

திருகோணமலை சட்டத்தரணிகள் அடையாள வேலை நிறுத்தம்

திருகோணமலை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பட்டால் நீதிமன்ற சட்டத்தரணிகள் இன்று (07) ஒரு மணி நேர அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் சட்டத்தரணி ஒருவரின் வீட்டிலும் அலுவலகத்திலும், சட்டத்துக்கு புறம்பான வகையில் பொலிஸாரினால், மேற்கொண்ட சோதனை நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த வேலை நிறுத்தம் இடம் பெற்றுள்ளது.

காலை 9 மணி தொடக்கம் 10 மணி வரை திருகோணமலை நீதிமன்றத்துக்கு முன்னால், சட்டத்தரணிகள் ஒன்று கூடி, தங்களுடைய எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )