வெளிநாடுகளில் அனர்த்தங்களை எதிர்கொண்ட தொழிலாளர்களின் குடும்பங்களில் பாடசாலைக் கல்வியைத் தொடரும் பிள்ளைகளுக்கான புதிய கல்வி நிகழ்ச்சித்திட்டம்

வெளிநாடுகளில் அனர்த்தங்களை எதிர்கொண்ட தொழிலாளர்களின் குடும்பங்களில் பாடசாலைக் கல்வியைத் தொடரும் பிள்ளைகளுக்கான புதிய கல்வி நிகழ்ச்சித்திட்டம்

ஜனாதிபதி நிதியம் மூலம், வெளிநாடுகளில் ஏதேனும் எதிர்பாராத அனர்த்தங்களை எதிர்கொள்ளும் வெளிநாடுகளில் பணி புரியும் தொழிலாளர்களின் இலங்கையில் கல்விகற்கும் மாணவர்களின் கல்வியைத் தொடர்வதற்காகன கல்வி உதவி வழங்கும் புதியதொரு நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சனாதிபதி நிதியம் மூலம் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படும் இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் பிரதான நோக்கம் யாதெனில், வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் வெளிநாடுகளில் திடீர் அனர்த்தங்களுக்கு (மரணமடைதல், திடீர் விபத்துக்கள், சிறைவாசம் அல்லது காணாமல் போதல்) ஆளாகும் பட்சத்தில் அவர்களின் இந்த நாட்டில் கல்விகற்கும் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளைத் தொடர்வதற்கு நிதிசார் பங்களிப்பினை வழங்குதல் ஆகும்.

இதன் பிரகாரம் 2025 சனவரி மாதம் 01 ஆம் திகதிக்குப் பின்னர் அனர்த்தங்களை எதிர்கொண்ட வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் இந்த நாட்டில் கல்விகற்கும் பிள்ளைகளுக்கு அதற்காக விண்ணப்பிக்க முடியும்.

இது தொடர்பான மேலதிக விபரங்ள் அல்லது விண்ணப்ப படிவங்களை www.presdentsfund.gov.lk இனையதளம் மூலம் மற்றும் எந்தவொரு பிரதேச செயலகத்திலிருந்தும் பெற்றுக்கொள்ள முடியும்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )