
ஹோர்டன் சமவெளியில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் நீலக்குறிஞ்சி மலர்கள்
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் பூவான நீலக்குறிஞ்சி மலர்கள் தற்போது இலங்கையின் மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் 2,100 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் ஒளிந்திருக்கும் தேசிய பூங்காவாவின் ஹோட்டன் சமவெளியில் அதிகமான இடங்களில் பூக்கத் துவங்கியுள்ளன.
ஹோட்டன் சமவெளி உலகத்தில் மிக அரிய உயிரியல் சூழல்களுக்குள் ஒன்றாக கருதப்படுகிறது இதில் 12 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் நீலக்குறிஞ்சி மலர்கள் கடந்த 2013 ஆம் ஆண்டு பூத்ததாகவும் அதன் பின்னர் இவ்வருடம் (2025) பூத்து உள்ளது எனவும் மீண்டும் 2037 ஆண்டு பூக்கும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கும் தெரிவிக்கின்றனர் .
இந்தப் பூக்களைக் காண வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் ஹோர்டன் சமவெளிக்கு படையெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

