
இஷாராவை நாளை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை
நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தியை நாளை (15) நாட்டிற்கு அழைத்து வர தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புதுக்கடை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வைத்து சுட்டுக் கொலை செய்யப்பட்ட, சிறையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவின் தலைவர் கணேமுல்ல சஞ்சீவாவின் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் இன்று (14) கைது செய்யப்பட்டார்.
துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற நாளிலிருந்து இஷாரா செவ்வந்தி தலைமறைகியமை குறிப்பிடத்தக்கது
CATEGORIES Sri Lanka

