
2026 உலக கோப்பை கால்பந்து ; 6 நாடுகள் தகுதி
உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2026) ஜூன் 11-ந்திகதி முதல் ஜூலை 19-ந்திகதி வரை கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் நடக்கிறது.
இதில் 48 நாடுகள் பங்கேற்கின்றன. இது 2022-ம் ஆண்டு போட்டியை விட 16 அணிகள் கூடுதலாகும்.
போட்டியை நடத்தும் 3 நாடுகள் நேரடியாக விளையாடும். மற்றவை தகுதி சுற்று மூலம் தேர்வாகும்.
ஜப்பான், நியூசிலாந்து, ஈரான், நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா, உஸ்பெகிஸ்தான், தென்கொரியா, ஜோர்டான், ஆஸ்திரேலியா, பிரேசில், ஈக்வடார், உருகுவே, கொலம்பியா, பராகுவே, மொராக்கோ, துனிசியா, எகிப்து. அல்ஜீரியா, கானா மற்றும் குட்டி நாடான கேப்வெர்டே ஆகிய நாடுகள் ஏற்கனவே தகுதி பெற்று இருந்தன.
இந்த நிலையில் இங்கிலாந்து, கத்தார், தென்ஆப்பிரிக்கா, சவுதி அரேபியா, ஐவேரி கோஸ்ட், செனகல் ஆகிய 6 நாடுகள் உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.
CATEGORIES Sports News

