இஷாரா இன்று முக்கிய விசாரணைகளுக்காக CID யிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டார்              கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு பணம் பெறவில்லை என இஷாரா தெரிவிப்பு

இஷாரா இன்று முக்கிய விசாரணைகளுக்காக CID யிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டார் கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு பணம் பெறவில்லை என இஷாரா தெரிவிப்பு

முக்கிய விசாரணைக்காக இஷாரா செவ்வந்தி இன்று கொழும்பு குற்றப்பிரிவிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி கணேமுல்ல சஞ்சீவ கொலையில் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தியை கொழும்பு குற்றப்பிரிவு தடுத்து வைத்து விசாரித்து வருகிறது.

கொழும்பு குற்றப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணையில், மேலும் பல தகவல்களை செவ்வந்தி வெளியிட்டுள்ளார்.

போதைப்பொருள் கடத்தல்காரரும் தனது முன்னாள் காதலருமான ஒரு நபரின் மூலம் ‘கெஹெல்பத்தர பத்மே’ என்பவரைத் தான் சந்தித்ததாக இஷாரா செவ்வந்தி CID க்கு தெரிவித்துள்ளார்.

கணேமுல்ல சஞ்சீவ கொலையின் சூத்திரதாரி எனக் கூறப்படும் சமிந்து தில்ஷான் பியுமங்கவை ,’கெஹெல்பத்தர பத்மே’ தனக்கு அறிமுகப்படுத்தியதாகவும் “எப்படியாவது அவனை வைத்து வேலையை முடித்து விடு ” என பதமே தன்னிடம் கூறியதாகவும் இஷாரா தெரிவித்துள்ளார்.

பத்மேவின் அறிவுறுத்தலுக்கு இணங்க சமிந்து தில்ஷானுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்தி, கொலையைச் செய்யுமாறு தான் அவரைத் தூண்டியதாகவும் இஷாரா செவ்வந்தி கொழும்பு குற்றப் கூறியுள்ளார்.
கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு தான் எந்தவித பணமும் பெறவில்லை என்றும் இஷாரா செவ்வந்தி குறிப்பிட்டுள்ளார்

இதேவேளை இஷாரா செவ்வந்தி தலைமறைவாகியிருக்க உதவிய குற்றச்சாட்டின் பேரில், நேற்று பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இதேவேளை களனி பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படும் கம்பஹா பாபா, கெஹல்பத்தர பத்மேவின் தந்தை மூலமாக பத்மேவை தான் அடையாளம் கண்டதாக விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

கெஹல்பத்தர பத்மேவின் போதைப்பொருள் வலையமைப்பிலும் தான் ஈடுபட்டதாக அவர் விசாரணை அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.

பத்மேவின் அறிவுறுத்தலின் பேரில் கம்பஹா ஒஸ்மானைக் கொல்ல துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் பயணித்த வாகனத்தை தான் வைத்திருந்ததாகவும் சந்தேக நபர் கூறியுள்ளார்..

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )