
இலங்கையில் அதிகரிக்கும் மலேரியா நோயாளர்கள்
2025 ஆம் ஆண்டில் இதுவரை 35 மலேரியா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் மலேரியா நோயினால் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தேசிய மலேரியா கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோரிடத்திலேயே மலேரியா நோய் அடையாளம் காணப்படுவதாக தேசிய மலேரியா கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த விசேட வைத்திய நிபுணர் இந்தீவரி குணரத்ன, 071 284 1767 என்ற தொலைபேசி எண்ணுக்கு அழைப்பதன் மூலம் மலேரியா தொடர்பான தகவல்களைப் பெற முடியும் என்று தெரிவித்தார்.

